காவேரிப்பாக்கத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு!

காவேரிப்பாக்கத்தில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு!

காவேரிப்பாக்கம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.


காவேரிப்பாக்கம் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் சென்னை தலைமையிட வேளாண்மை துணை இயக்குனர் கலாதேவி, வேளாண்மை துறையில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு மேற்கொண்டார். அதன்படி காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படும் கோடை சிறப்புப் பயிர் திட்டத்தின் கீழ், நெல்லில் மிக சன்ன ரக ஊக்குவிப்பு இனத்தில் கோ 55, கோ 54 பயிர்கள் சாகுபடி மேற்கொண்ட அத்திப்பட்டு, சங்கரன்பாடி உள்ளிட்ட கிராம விவசாயிகளை சந்தித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து வேகமங்கலம் கிராமத்தில் வட்டார வேளாண்மை துறை சார்பாக மானியத்தில் தொடங்கப்பட்ட கரிம வேளாண்மை இடுபொருள் மையத்தினை ஆய்வு செய்தார். பின்னர் களத்தூரில் செயல்பட்டு வரும் பாரம்பரிய நெல் ரகங்கள் பராமரிப்பு வங்கியினை பார்வையிட்டார். இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எஸ்.சண்முகம், வேளாண்மை துணை இயக்குனர் (திட்டம்) செல்வராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கே.சண்முகம், வேளாண்மை துணை அலுவலர் கருப்பையா மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் அக்‌ஷயா, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story