பள்ளி கட்டிடம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட இடத்தில் துணை சபாநாயகர் ஆய்வு

பள்ளி கட்டிடம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட இடத்தில் துணை சபாநாயகர்  ஆய்வு

ஆய்வு 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மல்லவாடி ஊராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய 5 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, இடத்தை தேர்வு செய்து பேசியதாவது; துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மல்லவாடி ஊராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய 5 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடத்தை ஆய்வு செய்து , பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சொந்தமான இந்த இடத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு கொடுத்து அதன் மூலம் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கு நபார்டு வங்கி கடன் உதவி மூலம் 5 வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யப்பட்டது.

இந்த பள்ளி கட்டடத்தின் மூலம் மாணவர்கள் போதுமான இட வசதியுடன் சிறப்பான முறையில் படிக்க வேண்டும் என்பதற்காகவும் மற்றும் மாணவர்களுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக் கொடுத்து ,அதன் மூலம் நமது மாநிலத்திற்கும் நல்ல ஒரு பெயரை உருவாக்கி கொடுக்க வேண்டும். ஆகையால் மாணவர்கள் அனைவரும் நீங்கள் சிறப்பான முறையில் படிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்பா.ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, இன்ஜினியர்கள் அருணா, தமிழரசி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். ,

Tags

Next Story