நடுநிலை பள்ளிகட்டிடத்தை திறந்து வைத்தார் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி

நடுநிலை பள்ளிகட்டிடத்தை திறந்து வைத்தார் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி

நடுநிலைபள்ளி திறந்து வைப்பு

அனைத்து குக்கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளையும் அக்கறையுடன் செய்து வருபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என துணை சபாநாயகர் கு பிச்சாண்டி தெரிவித்தார்

தி.மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தி.வலசை, தண்டரை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் கட்டட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருவண்ணாமலை ஒன்றிய செயலளாளர் சி.மாரிமுத்து தலைமை தாங்கினார்.

கல்வி அலுவலர எஸ்.பி.கார்த்திகேயன் வட்டார கல்வி அலுவலர் ஜி.பவானி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானசௌந்தரி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகிக்க ஊராட்சி மன்ற தலைவர் க.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கு.பிச்சாண்டி , தி.வலசை, தண்டரை ஆகிய ஊராட்சிகளில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தும் ,பள்ளி மாணவர்களுக்கு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி ,சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அக்கறையுடன் செயல்படுத்தி கொண்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த பள்ளி கட்டிடம் ஆகும்.

இந்த பள்ளியில் அதிக அளவில் மாணவர்களை சேர்ப்பதற்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இலவசமாக உயர்கல்வி படிக்கக்கூடிய திட்டத்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது கொண்டு வந்தார். இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி செல்லும் திட்டம், மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம், பெண்கள் மேல் படிப்பு படிக்க அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை வழங்கிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என்று பேசினார்.

இந்த விழாவில் முன்னாள் துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவகாமிகணேசன் ,வசந்தா பழனி, அ.கிருஷ்ணமூர்த்தி ,ஒன்றிய துணை செயலாளர்கள் டி.வசந்திவிஜயகுமார் ,கே.எம். பழனி, பா.பாபு, ஒன்றிய பொருளாளர் ஆர்.பெருமாள், தண்டரை ஊராட்சி மன்ற தலைவர் பி.முருகன் மற்றும் சீ.சந்திரசேகரன், பி.பழனி, ஆண்டியாபாளையம் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.பச்சையப்பன் உள்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தி.வலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கே.சாந்தி நன்றி கூறினார்.

Tags

Next Story