திருப்பூரில் ஆதரவற்ற பெண் பாலியல் பலாத்காரம்

திருப்பூரில் ஆதரவற்ற பெண் பாலியல் பலாத்காரம்

ஆதரவற்ற பெண் பாலியல் பலாத்காரம்

திருப்பூர் பார்க்ரோட்டில் உள்ள நடை மேம்பாலத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் பாலியல் பலாத்காரம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பார்க் ரோடு பகுதியில் உள்ள நடைபாதை மேம்பாலத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் பாலியல் பலாத்காரம். திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை. திருப்பூரில் வாகன போக்குவரத்து அபரிமிதமாக உள்ளதால், நெரிசல் நிரந்தரமாக உள்ளது. மக்கள் அதிகளவு கூடும் இடங்களில், ரோடுகளை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், விபத்து, உயிரிழப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையிலும், ஆறு இடங்களில், நடை மேம்பாலங்கள் (ஸ்கை வாக்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூர் பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் நடை மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நடை மேம்பாலத்தில் ஆதரவற்றவர்களும் முதியோர்களும் இரவில் தங்கி வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த நடை மேம்பாலத்தில் 35 வது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார் அப்பொழுது அதன் நடை மேம்பாலத்தில் வந்த இரண்டு பேர் மது போதையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த முதியவர் ஒருவர் அவர்களை தடுக்க முற்பட்டபோது அவரையும் தலையில் தாக்கியுள்ளனர். இந்த நிலையில் மாலை பள்ளி முடிந்து அந்த நடை மேம்பாலத்தில் வந்த மாணவர்கள் இதை கண்டு சத்தமிட்டனர். இதனால் அந்த இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட பெண்ணையும் முதியவரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரும்பு தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள அந்த நடை மேம்பாலத்தின் இரண்டு பகுதிகளிலும் விளம்பர பேனர்களை வைத்து மறைத்துள்ளதால் அங்கு நடந்த சம்பவம் வெளியே தெரியவில்லை. இது போன்ற விளம்பர பலகைகள் இருப்பதால் பல சமூக விரோத செயல்கள் அங்கு நடப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story