அல்லேரி மலையில் 1000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

அல்லேரி மலையில் 1000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

சாராய ஊரலை அழித்த போலீசார்

அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் 1000 லிட்டர் சாராய ஊரல் அழிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான 10 பேர் கொண்ட போலீசார் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை பகுதியில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டுக்கு நடுவே செல்லும் கானாற்று ஓடை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக பூமிக்கு அடியில் புதிதாக 1 பிளாஸ்டிக் பேரல் அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.அந்த ஒரு பேரலை திறந்து பார்த்த போது அதில் கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக சுமார் 1000 லிட்டர் சாராய ஊரல்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சாராய ஊரலை கீழே கொட்டி அழித்தனர். மேலும், அங்கிருந்த பிளாஸ்டிக் பேரல்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தாத வகையில் தீயிட்டு அழித்தனர்.

Tags

Next Story