கல்வராயன்மலையில் 1000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரதி, அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் கல்வராயன்மலை பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, குரும்பலுார் ஓடை அருகே பேரல்களில் சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 2 பேரல்களில் இருந்த 1,000 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர். இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags
Next Story