அரகண்டநல்லூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு !

அரகண்டநல்லூர் அருகே 1000 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு !

 சாராய ஊரல் அழிப்பு

சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த ஊரல் அழிப்பு - மேலும் சாராய ஊரல் போட்ட நபர் குறித்தும் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டரை கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் சாராய ஊரல் போடுவதாக விழுப்புர மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளரின் மேற்பார்வையில் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தண்டரை கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராய ஊரல் குறித்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த, ஏழுமலை என்பவருது நிலத்தின் அருகே இருந்த கல்லாங்குத்து( பாறை) பகுதியில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 பேரல்களில் 1000 லிட்டர் சாராய ஊரல் போடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட 1000 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் அதே பகுதியில் கொட்டி அழித்தனர். மேலும், ஊரல் போடுவதற்கு பயன்படுத்திய பேரல் உள்ளிட்ட பொருட்களை அதே பகுதியில் தீயிட்டு அழித்தனர். மேலும் சாராய ஊரல் போட்ட நபர் குறித்தும் தீவிரமாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story