கல்வராயன் மலையில் 10,400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
அழிக்கப்பட்ட சாராய ஊறல்கள்
கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் மதுவிலக்கு தொடர்பாக கல்வராயன்மலை பகுதியில் நேற்று முன்தினம் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது, மலைக்காடு தொரக்கூர் பகுதியில் பேரல்களில் இருந்த 3,600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக, வெங்கடாசலம் மகன் ஆதிமூலம், ஜெயராமன் மகன் நல்லதம்பி, சின்னதுரை மகன் செந்தில் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதேபோல், விளாம்பட்டி ஓடை பகுதியில், பேரல்களில் இருந்த 6,800 லிட்., சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக, அருணாச்சலம் மகன் மது, லட்சுமணன் மகன் சரவணன், சடையன் மகன் செல்வராஜ், மாரிமுத்து, தங்கராஜ் மகன் விக்னேஷ், ராமசாமி மகன் கோவிந்தராஜ், ஆண்டி மகன் கோவிந்தன், லட்சுமணன் மகன் கோவிந்தன், பெருமாள் மகன் விஜயகுமார், வெள்ளையன் மகன் கலியமூர்த்தி ஆகிய 10 பேர் மீது வழக்கு பதிந்தனர்.