பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் வெடிப்பொருட்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் வெடிப்பொருட்கள் அழிப்பு

சேலம் நகரமலை அடிவாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் வெடிப்பொருட்களை போலீசார் அழித்தனர்.

சேலம் நகரமலை அடிவாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் வெடிப்பொருட்களை போலீசார் அழித்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சேலம் வழியாக மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை கருப்பூர் சுங்கச்சாவடி பகுதியில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர். இதில் 2½ டன் வெடிப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் இந்த வெடிப்பொருட்கள் அனுமதி இல்லாமல் கேரளாவில் உள்ள கல்குவாரிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வெடிப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். இதனிடையே இந்த வெடிப்பொருட்களை அழிப்பதற்காக கோர்ட்டில் போலீசார் சார்பில் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து வெடிப்பொருட்கள் அழிக்கும் பணி நேற்று நகரமலை அடிவாரத்தில் உள்ள மாநகர போலீஸ் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் பாதுகாப்பு உடை அணிந்து அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக அடிவாரத்தில் 25 அடி நீளத்தில் 3 அடி குழி தோண்டப்பட்டது. குழிக்குள் கீழே விறகு அடுக்கப்பட்டு மேற்பரப்பில் வெடிப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டன. அதன் மீது மரத்தூள் மற்றும் பலகைகளை வைத்த பின்னர் வெடிக்க செய்து அழிக்கப்பட்டது. அதிக சத்தம் கேட்காமல் இருப்பதற்காக குழி தோண்டி புதைத்து வெடிப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags

Next Story