பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீயிட்டு அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தீயிட்டு அழிப்பு

தீயிட்டு அழிக்கப்பட்ட குட்கா பொருட்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1156 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.
தமிழக அரசு பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்யவும் , பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை மூலம் ஆய்வு மேற்கொண்டதில் கடைகளில் விற்பனை மற்றும் வாகனங்களில் கடத்தப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட மொத்தம் 1156 கிலோ எடை கொண்ட குட்கா , பான் மசாலா புகையிலை போன்ற போதை வஸ்துகள் அனைத்தும், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கு பகுதியில் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி , மாவட்ட ஆட்சியர் கற்பகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி ஆகியோர் முன்னிலையில் கொட்டி தீயிட்டு அழிக்கப்பட்டு மண்ணை கொட்டி மூடப்பட்டன. இந்த நிகழ்வின்போது பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் , உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கவிகுமார், நகராட்சி ஆணையர் ராமர், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் காவல்துறையினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story