கல்வராயன் மலையில் சாராய ஊரல் அழிப்பு
அழிக்கப்பட்ட சாராய ஊரல்கள்
கல்வராயன்மலை பகுதியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 2100 லிட்டர் சாராய ஊரல்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவுப்படி கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் பிரதாப்குமார் ஆகியோர் தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது தும்பராம்பட்டு கிழக்கு ஓடை அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் பிடிக்கக்கூடிய 03 பேரல்கள் மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 03 பேரல்கள் என சுமார் 2,100 லிட்டர் சாராய ஊரலை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் இக்குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story