ஒடுகத்தூர் மலைப்பகுதியில் 1,500 லி., சாராய ஊறல் அழிப்பு

ஒடுகத்தூர் மலைப்பகுதியில் 1,500 லி., சாராய ஊறல் அழிப்பு

  ஒடுகத்தூர் மலைப்பகுதியில் 1,500 லி., சாராய ஊறல் அழித்த நிலையில், தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒடுகத்தூர் மலைப்பகுதியில் 1,500 லி., சாராய ஊறல் அழித்த நிலையில், தப்பி ஓடிய சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் ஒடுகத்தூர் அருகே ஜார்தான்கொல்லை மலை கிராமத்தில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் தீவிர சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அடர்ந்த காட்டுக்கு நடுவே உள்ள கானாற்று படுகையோரம் பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 100 லிட்டர் சாராயத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி வனப்பகுதிக்குள் தலைமறைவாகி விட்டனர்.

தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சாராய ஊறல் மற்றும் சாராயத்தை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேலும், சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட அடுப்புகள், பிளாஸ்டிக் பேரல்கள், மண் பானைகளை பயன்படுத்தாதபடி சேதப்படுத்தி தீயிட்டு எரித்தனர்.மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story