ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் விஷ தேனீக்கள் கூடு அழிப்பு
விஷ தேனி அழிப்பு
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகர மைய பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இங்கு பெண்கள் மகப்பேரு மருத்துவ சிகிச்சை, விஷக்கடிக்கலுக்கான சிகிச்சை, காய்ச்சல் பிரிவு, சித்தா ஹோமியோபதி, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் உள் மற்றும் புறநோயாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த அரசு மருத்துவமனையில் ஆத்தூர்,தலைவாசல்,காட்டுக்கோட்டை, மஞ்சினி,கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம் மல்லியக்கரை, தம்மம்பட்டி, கெங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த கிராமப்புற பொதுமக்கள் மருத்துவமனையில் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அரசு மருத்துவமனை வளாகம் முன்பு பழமை வாய்ந்த அரச மரம் உள்ள நிலையில் அந்த மரத்தில் விஷ தேனீக்கள் கூடு கட்டி மருத்துவமனைக்கு வரும் பொது மக்கள் நோயாளிகளை அச்சுறுத்தி வந்த நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலை அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அரச மரத்தில் இருந்த விஷத்தேனீக்களை தண்ணீர் பீச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் விஷ தேனீக்கள் கூண்டை அழித்தனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.