பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து பொருட்கள் அழிப்பு
தொண்டியில் போலிசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெடி மருந்து பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது.
ராமநாதபுரம் தொண்டி கடல் பகுதியில் வெடி வைத்து மீன் பிடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம் முறையில் மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் மீனவர்கள் சட்ட விரோதமாகவே இச் செயலில் ஈடுபடுகின்றனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் மீன் பிடிப்பதற்க்காக பதுக்கி வைத்திருந்த 80 ஜெலட்டினை தொண்டி போலிசார் பறிமுதல் செய்தனர். இதை அழிக்கும் பணி நேற்று தொண்டியம்மன் கோயில் குளத்தின் அருகில் மதுரை வெடிகுண்டு நிபுணர் எஸ்.ஐ. ரவி சந்திரன் , வர்க்கீஸ் தலைமையில் நடைபெற்றது. திருவாடானை இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிமருந்து பொருள்களின் தன்மை ஆராயப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டது. தீயனைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது.
Next Story