விசிக சுவர் விளம்பரம் தாரூற்றி அழிப்பு - திரண்ட விசிகவினர்,பரபரப்பு

விசிக சுவர் விளம்பரம் தாரூற்றி அழிப்பு - திரண்ட விசிகவினர்,பரபரப்பு

தாரூற்றி அழிக்கப்பட்ட சுவர் விளம்பரம் 

வேலூர் மாவட்டம் வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அணைக்கட்டு தொகுதி கணியம்பாடி ஒன்றியம் காட்பாடி தொகுதி பள்ளி கொண்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிசம்பர் 23 திருச்சியில் நடைபெறும் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டிற்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டுள்ளது. இந்நிலையில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபுரத்திலிருந்து பெண்ணாத்தூர் செல்லும் காட்டுப்புத்தூர் என்ற பகுதியில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோரின் பெயர்கள் மீது தார் ஊற்றி மர்ம நபர்கள் அழித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கோட்டி என்கின்ற கோவேந்தன் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வேலூர் தாலுகா காவல் நிலைய போலீசார் குவிக்கப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் கடந்த வாரம் துத்திபட்டு கிராமத்தில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரம் மீது தாறு ஊற்றி அழித்ததை கண்டித்து புகார் அளித்தும் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்தனர் தற்பொழுது சுவர் விளம்பரங்கள் எழுதும் இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags

Next Story