மிடாலக்காட்டில் குடிநீர் கிணறு அழிப்பு : மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மிடாலக்காட்டில் குடிநீர் கிணறு அழிப்பு கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
குமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட மிடாலக்காடு மேற்கு ஜங்சனில் அமைந்திருந்த அரசுக்கு சொந்தமான குடிநீர் கிணற்றை மர்ம நபர்கள் புல்டோசர் வைத்து இடித்து நிரப்பினர். குடிநீர் ஆதாரத்தை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் குடிநீர் ஆதாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும், பேரூராட்சி சொத்தை அபகரித்தவர்களிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தபட்ட துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், பேரூராட்சி பகுதிகளில் எரியாத தெருவிளக்குகள் எரிய செய்யவும், குண்டும் குழியுமாக சாலைகளை செப்பனிட பாலப்பள்ளம் பேரூராட்சியை வலியுறுத்தியும் பாலப்பள்ளம் ஜங்சனில் கிள்ள யூர் வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.
மிடாலக்காடு கிளை செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் ஆன்றோ, பால்ராஜ், பெற்க்மான்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி வட்டார கமிட்டி உறுப்பினர்கள் குமார், சகாயபாபு ,ராஜா , சோபனராஜ், வட்டார செயலாளர் சாந்த குமார் மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர் முருகேசன் ஆகியோர் பேசினர்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் நிறைவு செய்து பேசினார்.