மாவட்டத்தில் பொழிந்த மழைப்பொழிவின் விபரம்

மாவட்டத்தில் பொழிந்த மழைப்பொழிவின் விபரம்
X

பைல் படம் 

திண்டுக்கல் மாவட்டத்தில் 57.30மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 35.8மி.மீ மழை பொழிவு பதிவாகியுள்ளது.

திண்டுக்கல்லில் 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது.பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும் இரவு நேர மழை ஆறுதல் அளிக்கிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு 7 :00மணிக்கு 30 நிமிடங்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நேற்று காலை வெயில் அடித்தாலும் 11:30 மணிக்கு மேல் லேசான மழை பெய்து வெப்பத்தை தணித்தது.

அந்த வகையில் 12.05.2024 காலை 8 மணி முதல் 13.05.2024 காலை 8 மணி வரை மழைப்பொழிவின் விபரம் கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 11.5மி.மீ மழையும், பழனியில் 1மி.மீ மழையும், நிலக்கோட்டையில் 3.3மி.மீ மழையும், வேடசந்தூரில் 1.3மி.மீ மழையும், புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 1.3மி.மீ மழையும், கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 35.8மி.மீ மழையும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 57.30மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 35.8மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது .

Tags

Next Story