தேவநாத சுவாமி கோவில் : உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தேவநாத சுவாமி கோவில் :  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
X

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

தேவநாத சுவாமி கோவிலில் 21 லட்சத்து 56 ஆயிரத்து 626 ரூபாயும் 171கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்களும் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்டது
கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவிலில் உள்ள உண்டியல்கள் அவ்வபோது திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் வெங்கட கிருஷ்ணன் முன்னிலையில் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. இதில் 21 லட்சத்து 56 ஆயிரத்து 626 ரூபாய் வசூலானது. மேலும் 171கிராம் தங்கம், 165 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது.

Tags

Next Story