தேவர் குருபூஜை: பாஜக மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 61வது ஜெயந்தி விழா, 116வது குருபூஜையினை முன்னிட்டு பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தேனி 33வது வார்டில் முத்துராமலிங்கத் தேவர் திருவுரு சிலை அமைந்துள்ளது. இந்த முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் தேனீ நகரத் தலைவர் மதிவாணன் தலைமையில் முத்துராமலிங்க தேவரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .

மேலும் இந்த நிகழ்ச்சியில் கல்விப் பிரிவு மாவட்ட தலைவர் குமரேசன் ,நகர தலைவர் அசோக் ,வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஜெயராமன் ,நகர பொதுச்செயலாளர் ஜெயமுருகன், மாவட்டத் துணைத் தலைவர் பாண்டியராஜன் ,மகளிர் அணி நகரத்தலைவி கவிதா ,மாவட்ட செயலாளர் மீனா, தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் செல்வக்குமார் மற்றும் பாரதிய ஜனாத கட்சியின் மாவட்ட நகர நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .

மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வருகை புரிந்து கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள முத்துராமலிங்க தேவரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .அதனை தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் ,அவருடைய சிறப்புகளை பற்றியும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினார்கள் .இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனார்

Tags

Next Story