குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு வளர்ச்சி - நாஞ்சில் சம்பத்
நாஞ்சில் சம்பத் பிரச்சாரம்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழியை ஆதாித்து தெற்கு மாவட்ட திமுக சாா்பில் புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை வகித்தார். ஓன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி புதூர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
திராவிட இயக்க பேச்சாளா் நாஞ்சில் சம்பத் பேசுகையில் "ஏப்ரல் 19ல் ஜனநாயக திருவிழா நடைபெறவுள்ளது. சோழநாட்டில் ஓரு புதுக்கோட்டை உண்டு. ஆனால் இந்த புதுக்கோட்டைக்கு தனி வரலாறு உண்டு. அதிலும் உதயசூாியனுக்கு வாய்ப்பு உண்டு. தோ்தலில் பலர் போட்டியிடுகிறார்கள். ஆனால் நீங்கள் புறம்போக்கை ஆதாித்து பாவத்தை சம்பாதித்து கொள்ளாதீர்கள் கனிமொழிக்கு ஈடான வேட்பாளர் யாரும் இல்லை. ஏனென்றால் அவர் உங்கள் ரத்தத்தோடு கலந்து உணர்வோடு உங்களிடம் நல்ல பழக்கத்துடன் நல்ல பன்பையும் கடைபிடிப்பவர் கடந்த வௌ்ளம், மழை காலங்களில் கனிமொழி மட்டும் இந்த தொகுதிக்கு கிடைக்க வில்லை என்றால் மிகப்பொிய பாதிப்பையும், இழப்பையும் சந்தித்திருப்போம்.
ஏனென்றால் அப்படி பட்ட காலக்கட்டத்தில் இருசக்கர வாகனம் ஜேசிபி, போன்ற வாகனங்களில் சென்று மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றி ஜனநாயக கடமையை செய்தாா். ஏற்கனவே இங்குஅவர் செய்த பணிகள் ஏராளம் மீண்டும் ஓரு வாய்ப்பை வழங்கி அவர் வெற்றி பெற்றால் சென்னைக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி பொிய தொழில்நகரமாக எல்லா வகையிலும் வளர்ச்சியடையும் 1925ல் தொடங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இயக்கம் பல்வேறு வகையில் இங்கு தனது சித்தாந்தத்தை நிலைநாட்ட முயற்சித்தும் நடைபெறவில்லை இந்த முறை அதை நிறைவேற்ற வேண்டும் என்று பிஜேபியோடு இணைந்து வருகிறது.
10 ஆண்டுகாலம் எந்த திட்டங்களையுமே செயல்படுத்தாத பிஜேபிக்கு முடிவுரை எழுதும் தேர்தல் பல்வேறு கட்சிகள் சிதறிக்கிடந்ததை ஓருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கிய தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், இரண்டு முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்,அமைச்சர் என பலரையும் தன்னுடைய அதிகாரத்தில் இருக்கின்ற சிபிஐ வருமான வாித்துறை தேர்தல் ஆணையம் இதன்மூலம் பழிவாங்கி சிறயைில் அடைத்துள்ளது. பிஜேபி அரசு. ஜனநாயக கடமையையாற்றுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் அங்கீகாிக்கப்பட்ட கட்சி தலைவர்கள், மீண்டும் பிஜேபி ஆட்சி வருமேயானால் இந்தியா முழுவதும் சிறைச்சாலையாக மாறிவிடும்.
தமிழகத்தில் 20 ஆயிரம் ரவுடிகள் இருப்பதாக பட்டியல் தொிவிக்கின்றன அதில் 10 ஆயிரம் பேர் பிஜேபி கட்சியில் உள்ளனர். ஆன்மீகத்தில் அரசியலை கலந்து அதில் பிாிவினையை ஏற்படுத்தி வாக்குகளை பெறலாம் என்ற பிஜேபி திட்டத்திற்கு நாம் இடமளிக்க கூடாது. நாம் எல்லோருக்கும் ஓரு மருந்தாக ஆலயம் தேவைதான். ஆனால் அதில் அரசியலை கலப்பது தான் தவறு 600ஆண்டுகலாக இருந்த பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே அந்த இடத்தை வழங்க வேண்டும் என்று ஓரு தீர்ப்பை நீதிபதி வழங்கி தவறு செய்துள்ளார். அதன் மூலம் ரத்தகளறி ஏற்பட்டது. இது போன்ற தீர்ப்புகளால் சில வழக்குகளில் பல குற்றவாளிகள் கூட நான் விடுதலையாகிவிடுவேன் என்று கூறுகிறான். மோடி அணியும் உடை 11 அரை லட்சம் ஏனென்றால் அவருக்கு 56 இஞ்ச் பாடி, அவர் செல்லும் விமானம் 8 ஆயிரம் கோடி, அவர் தினசாி உண்ணும் காளான் 6 லட்சம், இப்படி வாழ்ந்த அவருக்கு நாட்டுமக்களை பற்றி கவலை இல்லை. மன்மோகன்சிங் பிரதமாராக இருந்தபோது 107 முறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார்.
மோடி ஓரு முறை கூட சந்தித்தது கிடையாது. ஆனால் 204 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளர். அதிமுக பிஜேபி கள்ளக்கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு எதிரான எல்லா சட்டங்களையும் ஆதாித்துவிட்டு இப்போது தேர்தலுக்காக தொடா்பு இல்லை என்று நாடகமாடுகிறார். ஆனால் ஓரே மேடையில் இதுகுறித்து விவாதிக்க தயாரா என்று கேட்கிறார். முதலமைச்சராக இருக்கிற ஸ்டாலின் 23வயதில் அவர் மிசாைவ சந்தித்தவர் 50 ஆண்டுகாலம் பொதுவாழ்வில் உள்ளவர் அவர்கென்று ஓரு வரலாறு உண்டு உனக்கு கூவத்துாில் காலை பிடித்து பதவிக்கு வந்த நீங்கள் கடைசியில் சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி விட்டிர்கள் .
இதிலிருந்தே நாட்டு மக்கள் உங்கள் துரோகத்தை தொிந்து கொள்வார்கள். ஓரு கோடியே 15 லட்சம் பேருக்கு உாிமைத் தொகை வழங்கப்படுகிறது விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும். இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருந்த குஜராத்தை பின்னுக்கு தள்ளி முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் முன்னேறியுள்ளது.கனிமொழிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு வெற்றியின் மூலம் இந்தியாவை தீர்மானிக்கும் இடத்தில் தமிழகம் இருக்கும். ஆகவே நடைபெறவுள்ள தேர்தலில் சுட்டொிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் அனைவரும் உதயசூாியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
பிரச்சாரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட அணி அமைப்பாளர் விபிஆர் சுரேஷ், துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின் பலவேசம், அாிகிருஷ்ண கோபால், முத்துலட்சுமி, சைமன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ஹாிபாலகிருஷ்ணன், ஜெயராஜ், வக்கீல் நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், ஆட்டோகோபால், நாகராஜன், ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் டாக்டர் சதானந்தன், மற்றும் மீனாட்சி மணிகண்டன், உள்பட இந்தியா கூட்டணியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.