புத்தேரி அரசுப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி பணிகள்

புத்தேரி அரசுப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி பணிகள்

அமைச்சர் மனோ தங்கராஜ்


புத்தேரி அரசுப்பள்ளியில் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நாகர்கோவில் அருகே புத்தேரி அரசு உயர்நிலை பள்ளியில் ஆதரவற்ற நம்பிக்கைக்கு உதவும் கரங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக ரூ.10 இலட்சம் செலவில் கழிப்பறைகள், சுற்றுசுவர் கட்டுதல், வர்ணம் பூசுதல், கதவுகள் அமைத்தல், இன்டர்லாக் கற்கள் அமைத்தல், பள்ளி மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த பணிகளை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன், கார்பஸ் கிறிஸ்டி பள்ளி தாளாளர் பர்வீன் மேத்யூ, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, புத்தோரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், தலைமையாசிரியர் விஜிலா ஜாய்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story