அமரகுந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்
அமரகுந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை ஓமலூர் எம்.எல்.ஏ மணி துவக்கிவைத்தார்.
சேலம் மாவட்டம்,ஓமலூர் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி,மல்லிகுட்டை, அமரகுந்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. இதில் ராமிரெட்டிபட்டி ஊராட்சி கருவேப்பிலை திட்டு என்ற பகுதியில் தலா 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, மல்லிகுட்டை ஊராட்சி அத்ராம்பட்டியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, அமரகுந்தி ஊராட்சியில் நிழற்குடை மற்றும் 30ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிகளை ஓமலூர் எம்எல்ஏ மணி பூஜை பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன், அதிமுக ஒன்றிய செயலாளர் மணிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story