சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் - ஆட்சியர் ச.உமா ஆய்வு
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், துத்திக்குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் துத்திக்குளம் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி முதல் பெரியசாமி கோவில் வரை சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அக்கியம்பட்டி – எருமபட்டி சாலை முதல் கொல்லிமலை சாலை புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அட்மா குழுத்தலைவர் அசோக்குமார், தனபால் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story