திருச்செங்கோடு பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

திருச்செங்கோடில் பல்வேறு பகுதிகளில் இரண்டு கோடியே 83 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் இரண்டு கோடியே 83 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் தொகுப்பில் ஏழாவது வார்டு சட்டையம்புதூர் பகுதியில் சாலை அமைக்கும் பணி, எட்டாவது வார்டு ரேவதிஸ்கூல் அருகில்சாலை அமைக்கும் பணி, மற்றும் கைலாசம்பாளையம் பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 15 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிக்களுக்கு திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதேபோல் இருபத்தைந்தாவது வார்டு மேட்டுத்தெரு பகுதியில் 15வது நிதி குழு மானியத்தில் 23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்ட சமுதாயக் கழிப்பிடத்தையும் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்கள் திறந்து வைத்தார்.

அதே பகுதியில் கழிவறைக்கு தடையின்றிதண்ணீர் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழாய்களையும் மேட்டுத்தெரு பகுதியில் கான்கிரீட் சாலையையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், நகர் மன்ற உறுப்பினர்கள் 17வது வார்டு திவ்யா வெங்கடேஸ்வரன், 25வது வார்டு புவனேஸ்வரி உலகநாதன், 8வது வார்டு.தினேஷ்குமார் 1வது வார்டு மாதேஸ்வரன், 3வது வார்டு செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராசன், ராதா சேகர்ஆகியோர் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story