திருச்செங்கோடு நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

திருச்செங்கோடு நகராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்கம்

வளர்ச்சி திட்ட பணிகள்


திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 15 வது வார்டு பகுதியில் உள்ள ஜோகிதர்மடம் பகுதியில் 15வது மத்திய நிதி குழு மானியம் ரூ.11லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெண்கள் மட்டுமே பயன்படுத்தகூடிய பொது கழிப்பிட கட்டிடத்தை நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இதே போல் திருச்செங்கோடு நகராட்சி வளாகத்திற்கு வரக்கூடிய பொதுமக்கள் பயன் படுத்தும் வகையில் 15வது நிதிக்குழு மான்ய க்குழு நிதி ரூ 13 லட்சத்தில் கட்டப் பட்ட சமுதாயக் கழிப்பிடத்தை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் திருமதி நளினி சுரேஷ்பாபு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

Tags

Next Story