வளர்ச்சி திட்டங்களால் உணவுகள்  நஞ்சாகிறது - மரிய ஜெனிபர் 

வளர்ச்சி திட்டங்களால் உணவுகள்  நஞ்சாகிறது - மரிய ஜெனிபர் 

வாக்கு சேகரிப்பு

வளர்ச்சி திட்டங்களால் உணவுகள்  நஞ்சாகிறது என நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் இன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசன்விளையில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் வெள்ளிச்சந்தை, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு, கக்கோட்டுதலை,திருநயினார்குறிச்சி, அம்மாண்டிவிளை,

கடியப்பட்டினம், மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது; குமரியில் எத்தனையோ குடும்பங்கள் கேன்சர் வியாதியால் செத்து கொண்டிருக்கிறது.

ஒரு தூய மண்ணில் இருந்த குடிமக்கள் இன்று எப்படி கேன்சரால் பாதிக்கப்படலாம். கடலில் இருந்து மீன் எடுத்து சாப்பிடுகிறோம். நல்ல விளைநிலங்களில் உள்ள தேங்காய், கிழங்கு, நெல், வாழை ஆகிய எல்லா விவசாய பொருட்களை சாப்பிடுகிறோம். ஆனாலும் இரண்டு வயது குழந்தைக்கு கேன்சர் இருக்கு.

அது எந்த புகையிலையை பிடித்தது, எந்த மதுவை குடித்தது. நம்மிடம் கொண்டுவரப்படும் வளர்ச்சி திட்டங்களால் உணவு நஞ்சாக போய் கொண்டிருக்கிறது. காற்று நஞ்சாக மாறி கொண்டிருக்கிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் இதை கருவறுக்க வேண்டும். இந்த தேர்தலில் நாம் சிந்தித்து,

உங்கள் வாக்குகளை ஒரு தூய தமிழ் தேசிய அரசியலை நிறுவும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தில் வாக்களித்து ஒருமுறை பாருங்கள். கன்னியாகுமரி மாவட்டம் அடையபோகும் மாற்றத்தை நீங்கள் பார்ப்பீர்கள். எங்களின் கரங்களை வலுப்படுத்துங்கள். உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்க்கு எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story