ரூ.11.67 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

ரூ.11.67 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள்  - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

ஆட்சித்தலைவர் ச.உமா

நாமக்கல்மாவட்டம், இராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு நகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (17.5.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, ரூ.11.67 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இராசிபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.86 கோடி மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் மற்றும் பன்னடுக்கு வாகனம் நிறுத்தும் இடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதையும், ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் கோனேரிப்பட்டி ஏரி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி தூர்வாரும் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி, அனிமூரில் ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டு கிடங்கில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், மட்கும் குப்பைகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து நுண் உரம் தயாரிக்கப்படுவது குறித்தும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்கள் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படுவது குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்து, ஆய்வு மேற்கொண்டார். மேலும், கொல்லப்பட்டியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டும் பணி, ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் திருச்செங்கோடு மலை அடிவாரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணி மற்றும் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் நெசவாளர் காலனி, நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதியதாக இரண்டு வகுப்பறை கட்டடங்கள் என மொத்தம் ரூ.11.67 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story