பேராவூரணி தொகுதியில் ரூ.3.78 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள்
தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில், தூர்வாரும் திட்டப்பணிகள், தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம் நெல்லியடிக்காடு மற்றும் ஆதனூர் கிராமத்தில் அம்புலியாறு வடிகால் தொலைக்கல் 38.00 கிலோமீட்டர் முதல் 38.70 கிலோ மீட்டர் வரை தூர்வாரும் பணி ரூபாய் 23 லட்சத்தில் நடைபெறுகிறது.
இதேபோல், நீர்வள ஆதாரத்துறை அக்கினியாறு வடிநிலக் கோட்டத்தில், பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை கிராமத்தில் தேனங்காடு ஏரிக்கு நீர் வழங்குவதற்கு கல்லுக்குளம் வாரியின் குறுக்கே, ரூபாய் 3 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் அணைக்கட்டு கட்டும் பணி நடைபெறுகிறது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், அழகியநாயகிபுரம் ஊராட்சி, கரிசவயலில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணி, கொள்ளுக்காடு ஊராட்சி, நாடார் தெரு, மாரிக்குறிச்சி அம்மன் கோவில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி, இரண்டாம்புளிக்காடு ஊராட்சி, காத்தாயி அம்மன் கோவில் விழா மேடை ரூ.10 லட்சத்தில் அமைக்கும் பணி என மொத்தம் ரூபாய் 3 கோடியே 78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அக்கினி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் ஆர். அய்யம்பெருமாள், பாசன உபகோட்ட செயற்பொறியாளர் திருவள்ளுவன், உதவி பொறியாளர்கள் மதியழகன், பிரசன்னா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்.நாகேந்திரன், சு.சடையப்பன், ஒன்றிய பொறியாளர் மணிமேகலை, சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அ.அப்துல் மஜீத், தனபால், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சோ.வைரவன் (குருவிக்கரம்பை), என்.வளர்மதி (இரண்டாம் புளிக்காடு), சா.கவிதா (கொள்ளுக்காடு), ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா ராஜேந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், கிராம பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.