ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்
ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்
புதுக்கோட்டை ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து பிழைகள் கூறப்பட்டனர்
அம்ரித் பாரத் திட்டத்தில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை ரூபாய் 6.89 கோடியில் மேம்படுத்தும் திட்டத்தில் சுவர் கட்டுமான பணிகளும், மின் தூக்கிகள் அமைக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அம்ரித் பாரத் திட்டத்தில் மாநிலத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த பட்டியலில் புதுக்கோட்டையில் ரயில் நிலையம் இல்லை மாநிலங்களவை உறுப்பினர் எம் அப்துல்லா புதுக்கோட்டையும் இத்தொடகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன் பிறகு மதுரை கோட்ட அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்தனர் 2023 ஏப்ரலில் ரூபாய் 6.89 கோடிக்கண ஒப்பந்த பிழைகள் கூறப்பட்டன. பழுதடைந்து சுவரை இடித்து விட்டு புதிதாக கட்டுதல், ரயில் நிலைய முகப்பை பொலிவூட்டும் வகையில் அமைத்தல், மின் தூக்கிகள், நீளமான ரயில் நடை மேடை அமைத்தல் மற்றும் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் முதல் கட்டமாக பழுதடைந்த சுவர் இடித்து விட்டு புதிய சுவர் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் முதியோர்களின் வசதிக்காக மேல்நிலை நடைபாதையில் மின் தூக்கிகள் அமைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதல் நடைமேடை மற்றும் இரண்டாவது நடைமேடைகளில் இந்த லிப்ட் செயல்பாட்டுக்கு வரும் மின் தூக்கி அமைப்பதற்கான கட்டடப்பணிகள் முடிவடைந்த உடன் மின் தூக்கிகள் நிறுவப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மக்களவைத் தேர்தலுக்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
Next Story