கொல்லங்கோடு நகராட்சியில் ரூபாய் 41.60 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

கொல்லங்கோடு நகராட்சியில் ரூபாய் 41.60 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்


கொல்லங்கோடு நகராட்சியில் ரூபாய் 41.60 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்


கொல்லங்கோடு நகராட்சியில் ரூபாய் 41.60 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு நகராட்சியில் மஞ்சத்தோப்பு காலனி பகுதியில் விளையாட்டு மைதான அமைக்க ரூபாய் 15 லட்சமும், ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை அமைக்க ரூ 17 லட்சமும், அதே பகுதி அரசு தொடக்கப்பள்ளியில் கழிவறை அமைக்க ரூபாய் 5 லட்சமும், பெயர்தலை - வாழவிளை சாலை சீரமைக்க ரூபாய் 4.60 லட்சம் என மொத்தம் 41.60 லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த பணிகளின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராஜேஷ் குமார் எம்எல்ஏ கலந்துகொண்டு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கொல்லங்கோடு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் டென்னிஸ், அசோகன், ஸ்டீபன், ரெஜிஸ், நகராட்சி கவுன்சிலர் ஜெரோம், காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story