தி மு க ஆட்சியில் குமரியில் வளர்ச்சி பணிகள் - உதயநிதி ஸ்டாலின்

தி மு க ஆட்சியில் குமரியில் வளர்ச்சி பணிகள் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின் குமரியில் பிரச்சாரம்
நாகர்கோவிலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் வருகை தந்தார்.

தக்கலை வழியாக நாகர்கோவில் சென்ற அவர் அங்கு பேசியதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்திற்கு 253 கோடியில் சீரமைக்கும் பணிகள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் 24 கோடியில் புற்றுநோய் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட 50- க்கும் மேற்பட்ட கோவில்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறைக்கு கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் நகர மக்களின் தேவைக்காக 300 கோடி மதிப்பில் புத்தன் அணையை குடிநீர் திட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. என்று குறிப்பிட்டார். இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story