பொன்னமராவதி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

பொன்னமராவதி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்

வளர்ச்சிதிட்ட பணிகள் துவக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சிதிட்ட பணிகளை எம்பி கார்த்திக் சிதம்பரம் துவக்கி வைத்தார்.

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் சிவகங்கை மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ்செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகளுக்கான தொடக்கவிழா நடைபெற்றது. சிவகங்கை எம்பி கார்த்திக் ப. சிதம்பரம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பொன்னமராவதி பேரூராட்சி 2 ஆம் வார்டு வையாபுரியில் ரூ. 11 லட்சத்தில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தைத் திறந்துவைத்தார்.

மேலும் 4 ஆவது வார்டு ஆதிதிராவிடர் காலனியில் அமைக்கப்பட்ட குளியல் தொட்டியை திறந்துவைத்தார். தொடர்ந்து தொட்டியம்பட்டி ஊராட்சி இந்திராநகரில் அமைக்கப்பட உள்ள பேவர் பிளாக் சாலைப்பணி, அம்மன்குறிச்சி ஊராட்சி சொக்கநாதபட்டியில் பேருந்து பயணிகள் நிழற்குடை, மேலமேலநிலை ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை, நல்லூர் ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை ஆகியவற்றுக்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தார்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், நகரத் தலைவர் எஸ். பழனியப்பன், வட்டார காங்கிரஸ் தலைவர் வி. கிரிதரன், பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பேரூராட்சி துணைத்தலைவர் கா. வெங்கடேஷ், உறுப்பினர்கள் மகேஸ்வரி நாகராஜன், புவனேஸ்வரி காளிதாஸ், ராமநாதன், தொட்டியம்பட்டி ஊராட்சித் தலைவர் கீதா சோலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story