சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
2 மாதத்திற்கு பின்பு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி..*
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 2 மாதத்திற்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரதித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.

இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம்,பௌர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்கள் மட்டும் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தொடர் மழையின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை என்பது விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் மழை பெய்தால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் தடை விதிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story