ஆலந்துறையில் கொட்டும் மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆலந்துறையில் கொட்டும் மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள் 

ஆலந்துறையில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் கோவை ஆலந்துறையில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் 97வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகு குத்தி, பூசட்டி எடுக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் சுமார் 1,000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பூச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செய்தனர்.அதேபோல் கிரேன் மூலம் தொங்கியபடி அழகு குத்தியும்,பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.

வ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஆலாந்துறை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.மேலும் ஜமாப்,கேரளா செண்டை மேளம்,கேரளா தையம் ஆட்டம் என பக்தர்கள் திருவிழா கலைகட்டியது.இறுதி நாளான இன்று மஞ்சள் நீராட்டு விழா இசை நிகழ்ச்சிகளுடன் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.

Tags

Read MoreRead Less
Next Story