சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

மழை முன்னெச்சரிக்கை காரணமாகவும் சதுரகிரி வழிப்பாதை நீரோடைகளில் அதிகளவு நீர் வருவதாலும் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் இந்த கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம்,பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி என்பது வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகாசி மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நாளை வரும் 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர் மழை காரணமாகவும் சதுரகிரி செல்லும் நீர்வழி பாதை நீரோடைகளில் நீரின் வரத்து சற்று அதிகமாக இருப்பதாலும் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. பக்தர்கள் யாரும் சதுரகிரியின் தானிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story