கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

நத்தம் அருகே கோட்டையூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

நத்தம் அருகே கோட்டையூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவை கடந்த மார்ச் 17ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இதில் கோட்டையூர், சின்னையம்பட்டி, நல்லூர், குரும்பபட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், மதுரை அழகர் கோயிலில் உள்ள பழமுதிர்ச்சோலையில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று முதல் தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு வேலார் வீட்டிலிருந்து கோயில் வீட்டிற்கு அம்மன்சிலை கொண்டு வரப்பட்டு கண் திறக்கப்பட்டது.தொடர்ந்து அலங்காரம் செய்து வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க அம்மன் கோயிலை அடைந்தார்.

Tags

Next Story