சிவகாசி அருகே கோவில் தாக்காரை முற்றுகையிட்ட பக்தர்கள்...

சிவகாசி அருகே கோவில் தாக்காரை முற்றுகையிட்ட பக்தர்கள்...

முற்றுகையிட்ட பக்தர்கள்

சிவகாசி அருகே கோவில் தாக்காரை முற்றுகையிட்ட பக்தர்கள்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் 8 சமூகத்தார் உறவின்முறை நிர்வாகிகள் நிர்வாகம் செய்து வந்தனர்.ஐகோர்ட் உத்தரவு காரணமாக இந்த கோவில் தற்காலிகமாக இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பில்,தக்காரக ரேவதி நிர்வாகம் செய்து வருகின்றார்.கோயிலில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு பிரிவுவினர் இடையே சாமி கும்பிடுவதில் கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, கோயிலில் 2ஆம் திருவிழா மற்றும் 11ஆம் திருவிழா கொண்டாட அனுமதி கேட்ட ஒரு சமுதாயத்திற்கு தக்கார் ரேவதி ரசீது போட்டதாக கூறப்படுகின்றது.இதற்கு வழக்கமாக திருவிழா கொண்டாடும் 8 சமூதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கோயில் கொடியேற்று விழா நடைபெற்று கொண்டிருக்கும் போது,கோயில் அலுவலகத்தில் இருந்த தக்கார் ரேவதியை 8 சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகள் முற்றுகையிட்டு ரசீது போட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோயிலில் பெரும் பரபரப்பானதை தொடர்ந்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் சிவகாசி DSP சுப்பையா தலைமையில் சாமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றதில், ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2 பிரிவினரும் திருவிழா கொண்டாட சம்மதம் தெரிவித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags

Next Story