பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி

பழனியில் அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி

வால்பாறையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள், உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.

வால்பாறையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள், உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்னும் சில தினங்களில் பங்குனி உத்திதிரத்திருவிழா தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது மாசிமகத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் பழனிக்கு வந்து செல்கின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள், பழனி சண்முக நதியில் புனித நீராடி பின்பு உடல் முழுவதும் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர்.உடல்கள் முழுவதும் அலகு குத்தி, அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடியே மேளம் அடித்துக்கொண்டு வந்த பக்தர்கள் பழனிமலையை வலம் வந்தனர்.

Tags

Next Story