பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

 பழனி அருகே நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் உச்சி காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழனி அருகே நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் உச்சி காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் அமைந்துள்ள மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது.திருவிழாவின் ஒரு பகுதியாக சண்முகநதியில் இருந்து மேளதாளங்களுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இரவு அம்மன் ரத ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் 5000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த பூக்குழி திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு பரவசமடைந்தனர்.

Tags

Next Story