பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கொண்டாட்டம் !
செம்மைப்படுத்தும் பணி
பழனியிலே பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கொண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காக தேரை செம்மைப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
பழனியிலே பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் கொண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதற்காக தேரை செம்மைப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. பழனியில் பங்குனி உத்திர விழா 10 நாட்கள் விழாவாக நடத்தப்படும். இந்த ஆண்டு வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஏப்ரல் 3ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 4ஆம் தேரோட்டும் நடைபெற உள்ளது. பங்குனி உத்திர நாளில் பழனியில் நடக்கும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. வெயில் நேரத்தில் போகரால் செய்யப்பட்ட நவபாசான சிலை வெப்பத்தால் உருகாமல் இருக்க நீராலி பத்தி என்ற அமைப்பு பழனி கோவிலில் உருவாக்கப்பட்டது. இதை சுற்றி நீரூற்றி வெயிலிலிருந்து சிலையை காப்பதற்காக பங்குனி உத்திர திருவிழா வடிவமைக்கப்பட்டது. இதற்கான தேரை செம்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
Next Story