ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் கோரிக்கை

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் பக்தர்கள் கோரிக்கை
திருப்போரூரில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதுதவிர, கந்தசஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன.

விசேஷ நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கந்தசுவாமி கோவிலுக்கு செல்லும் பிரதான வழியாக, வடக்கு குளக்கரை பகுதி உள்ளது. வாகனத்தில் வருவோர், பேருந்தில் வருவோர் இந்த வழியையே பயன்படுத்துகின்றனர். அதேபோல், கிழக்கு குளக்கரை பகுதியில், மொட்டை அடிக்கும் மண்டபம், நான்கு கால் மண்டபம், கழிப்பறை போன்றவை உள்ளன. குளத்தை ஒட்டி ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகள், பக்தர்களுக்கு இடையூறாக உள்ளன. ஆக்கிரமிப்பு கடைகளால், 30 அடி அகலத்தில் இருந்த வழியானது, 20 அடி அகலத்திற்கு குறுகிஉள்ளது.

மேலும், கடந்த 2021, ஜூலை மாதம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோவிலை ஆய்வு செய்தபோது, குளத்தின் சுற்றுச்சுவரை கலைநயத்துடன் புனரமைக்கவும், கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். தற்போது, 26 லட்சம் ரூபாய் மதிப்பில், நான்கு பக்க சுற்றுச்சுவர் கலைநயத்துடன் புனரமைக்கப்பட்டுள்ளது. கலைநயத்துடன் புனரமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை மறைக்கும் வகையில், சுற்றிலும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாகவும் அவை அமைந்துள்ளன. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என, பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோவில் நிர்வாகத்திற்கு, தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story