விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம்!
திருச்செந்தூர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடியதுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலானது சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதுடன் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால், சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்குகிறது. மேலும் இங்கு திருவிழா காலங்கல் தவிர்த்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதுடன் விசேஷ நாட்கள் என்றால் கூடுதலாக ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 ஆறு மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகம் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ள ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடியதுடன் நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Next Story