ஆத்தூர்: முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆத்தூர்: முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆத்தூர் அருகே உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் 26 ஆண்டுகளுக் கு பின் புதிய தேர்திருவிழா முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செய்தனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்திர கவுண்டன்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் 26 ஆண்டுகளுக்கு பின் புதிய தேர் வடிவமைத்து திருத்தேர் விழா வருகின்ற 10 ம் தேதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி கணபதி ஹோமம் அம்மன் பூச்சாட்டுகள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு பூஜைகள் செய்து வந்த நிலையில், இன்று 500 க்கும் மேற்பட்டோர் பக்கதர்கள் விமான அலகு கம்பி அலகு,கத்தி அலகு, தேர் அலகு, நாக்கு அலகு உள்ளிட்ட அழகு குத்தியும் பூ கரகம் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் வந்தனர்.இதில் அம்மனுக்கு தங்களது நேர்த்தி கடன் பக்கதர்கள் செலுத்தினர்கள்.

Tags

Next Story