இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
பாதயாத்திரை  
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் இருந்து ஆண்டுதோறும் மாரியம்மன் பக்தர்கள், இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரை சென்று அம்மனை வழிப்பட்டு திரும்புகின்றனர். தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில், நேற்று திருவேங்கடத்தில் இருந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். ஆண்டாள் பஜனைக்குழு சார்பில், நிர்வாகிகள் ஆகியோர் தலைமையில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், காவி உடை அணிந்து பாதயாத்திரை புறப்பட்டனர். கிராம கோவிலில் சிறப்பு பூஜை நடத்தி சென்ற பக்தர்களுக்கு நடுவப்பட்டி சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில், அன்னதானம் வழங்கப்பட்டது. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, உபயதாரர்கள் மூலம், ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட உள்ளது. நேற்று நடந்த பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சியில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பக்தர்களை வழி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story