முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யா வழி பக்தர்கள்
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் முட்டப்பதி, அய்யா வைகுண்ட சாமி பதி உள்ளது. இந்த பதியில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடை பெறுவது வழக்கம். அதேபோல கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை 4 மணிக்கு முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருநடை திறக்கப் பட்டு அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.
அதிகாலை முதலே கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்க ணக்கான அய்யாவழி பக்தர்கள் முட்டப்பதியில் குவிந்து இருந்தனர். அவர்கள் முட்டப்பதி தீர்த்தக்கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யா வைகுண்ட சாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.
இதேபோல முட்டப்பதியில் உள்ள அய்யா மூத்த நயினார் பதி, நரியன்விளையில் உள்ள தெட்சணத்து துவாரகாவதி, ஆமணக்கின் விளை வாவைப்பதி, ரஸ்தாகாடு காயாம்பூ பதி உள்பட அனைத்து அய்யா வைகுண்டசாமி பதிகளில் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அய்யாவுக்கு பணி விடைகள் நடந்தது.