மகா சிவராத்திரி; ராமேஸ்வரம் குவிந்த வடமாநில பக்தர்கள்
மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் குவிந்த வடமாநில பக்தர்கள், கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமியை வழிபட குவிந்த ஆயிரக்கணக்கான வடமாநில பக்தர்கள்.. கங்கை நீர் கொண்டு சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
உலக பிரசித்தி பெற்ற தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், இன்று மாசி மஹாசிவராத்திரியை முன்னிட்டு நாடுமுழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்து தீர்த்தங்களில் நீராடி பின்பு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், வடமாநில பக்தர்கள் ஏராளமானோர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமிக்கு காசியில் இருந்து புனித நீரை கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.