சித்திரை திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

சிவகாசி பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில்,8 நாட்களாக, சித்திரை பொங்கல் திருவிழா விமர்சியாக நடைப்பெற்றன.முக்கிய திருவிழாவான அக்கினிச்சட்டி மற்றும் கயர்குத்து நிகழ்வு இன்று காலையில் இருந்து உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீபத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றன.கயறுகுத்து திருவிழாவை முன்னிட்டு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது உடல்களில் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கொண்டும்,பல வித வர்ணங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு வேப்பிலை கொத்துகளை கைகளில் ஏந்தி ஓம்சக்தி,பராசக்தி என்று கோஷமிட்டபடி,கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வேப்பிலை குவியலில் தங்களது குழந்தைகளை படுக்க வைத்து நேர்த்திக்கடனும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன்,கரும்பு தொட்டில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை,சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story