மயிலியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

மயிலியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

மாசி திருவிழாவையொட்டி மயிலியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.


மாசி திருவிழாவையொட்டி மயிலியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கீழ்மயிலத்தில் பிரசித்தி பெற்ற மயிலி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும். மாசி திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, வீதிஉலா நடைபெற்றது. 8-ம் திருவிழாவான நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடை பெற்றது.

இதையொட்டி, மயிலியம்மன் ஆன்மிக வழிபாட்டு குழுவி னரால் விரதம் இருந்த பக்த்தர்கள், சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்த னர். அங்கு மயிலியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஊரணி பொங்கல் நடந்தது.

தொடர்ந்து இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதற்காக பக்தர்கள் அம்மனுக்கு, சீர்வரிசை எடுத்து வந்திருந்தனர். விழாவில் இன்று(வியாழக்கிழமை) ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story