தென்காசி தலைமலை சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை
தென்காசி தலைமலை சாஸ்தா கோவிலுக்கு அனுமதிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை அருகில் தலைமலை சாஸ்தா கோவில் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி முதல் மழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என ஆட்சியர் ஆணை பிறப்பித்தார். இதனால் ராமநதி அணை மூடப்பட்டது. தற்போது மழை குறைந்தது, இதனையடுத்து சாஸ்தா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story