எட்டுக்குடி முருகன் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்
பைல் படம்
ஆங்கில புத்தாண்டையடுத்து எட்டுக்குடி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டை ஒட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் காலை முதலே சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது முருகனின் ஆதிபடை வீடான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் முருக பெருமான் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அவருக்கு பால், பன்னீர் , சந்தனம், மஞ்சள் பொடி பால் தயிர் 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பட விளக்கம் படம் | நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
Next Story